இந்த நிகழ்வை பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கர்னல். க. ரவி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், சிறப்பு விருந்தினராக வந்த பின்னணி பாடகி பத்மஸ்ரீ சின்னபொன்னு குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அவற்றில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். நிகழ்வின் நிறைவுவிழா நேற்றுமுன்தினம் (மார்ச் 8) நடைபெற்றது. இந்த நிகழ்வினை கலை பண்பாட்டு மைய துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஞா. சிவகுமார் வரவேற்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்றவர்களை கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. இலங்கேஸ்வரன் அறிவித்தார். பின்னர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், திரைப்பட நடிகர் கவிதா பாரதி மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. மாங்குடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் கர்னல். க. ரவி அவர்களும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் கவிதா பாரதி அவர்களும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தனர்.