இதில் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையின் நன்மைகள், செலவினக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரச் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். நிகழ்வை மாவட்ட இளைஞர் அலுவலர் பிரவீன் குமார் தொடங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரித் தலைமைச் செயலாளர் ராமேஸ்வரன் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். மொத்தம் 105 பேர் போட்டியில் பதிவு செய்திருந்த நிலையில், 50 பேர் தேர்வாகி இறுதிச் சுற்றில் பேசினர். இதில் வெற்றி பெற்ற 10 பேருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த 10 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அடுத்த கட்டப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு