10 கோடி குடும்பங்கள் என்பதைக் கணக்கிட்டால் 50 கோடிக்கும் மேலானவர்களுக்கு இந்தக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வளர்ந்த நாடுகளே உதாரணமாக எடுத்துக்கொண்டு, தங்களது நாடுகளில் செயல்படுத்த விரும்புகின்றன. இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாமல் பல தடைகளை மாநில அரசு விதித்துக் கொண்டிருக்கிறது. ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மருத்துவக் காப்பீடுக்காக அவர்களது ஓய்வூதியத்தில் காப்பீடு தொகை பிடித்தம் செய்கிறார்கள். மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்றார். அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், அதிமுக காரைக்குடி மாநகரச் செயலர் சோ. மெய்யப்பன் ஆகியோரும் பேசினர்.
"மாணவர்கள் போராட்டத்தில் திமுக அரசியல் செய்கிறது”.. அமைச்சர் நிர்மல்குமார்