ஸ்ரீ செந்தில் ஆண்டவர் கோவில் உற்சவ பெருவிழா - பால்குட வைபவம்

சிவகங்கை மாவட்டம் பிரண்டை குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் தை மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு பால்குட வைபவம் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். யாக பூஜைகள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், கடம் புறப்பாடு, மூலவர் செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். வண்ண மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி