சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் காவல் நிலையம் ஒத்தக்கடை அருகே புதிய சோதனை சாவடி கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை டிஎஸ்பி கௌதம், நகர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியார், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய கட்டிடம் காவல் பணியை மேலும் வலுப்படுத்தும்.