சிவகங்கை: தேவகோட்டை ராம் நகர் உலக மீட்பர் ஆலயத்தில் நவநாள் திருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் திருவிழா நவநாள் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ராம்நகர் பங்குத்தந்தை அருள்பணி வின்சென்ட் அமல்ராஜ் தலைமை தாங்கினார். இன்று நடந்த சிறப்புத் திருப்பலியில் ஓரியூர் பங்குத்தந்தை அருள்பணி ஆல்பர்ட் முத்துமாலை, ஓரியூர் உதவி பங்குத்தந்தை ரபேல் அலெக்சாண்டர், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருள்பணி ஆரோக்கியசாமி, அருள்பணி தாமஸ், அருள்பணி அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த நற்கருணை பவனியை கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவினரால் வழிநடத்தப்பட்டது. இதில் அருள் சகோதரிகள், ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ராம்நகர் பங்குப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி