சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் காவலர் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவப்பிரசாத் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.