சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் முக்கிய பகுதியான வாட்டர் டேங்க் பாவேந்தர் சாலையோரம் குளம் அமைந்திருந்த நிலையில் அதன் மேல் பாலம் எழுப்பியும், கட்டிடம் கட்டியும் இரும்பு வியாபாரம் செய்யும் நிறுவனத்தை செந்தில் என்பவர் நடத்தி வந்தார். இது குறித்து காரைக்குடி நகராட்சி ஆணையாளருக்கு சென்ற புகாரை அடுத்து, அதனை ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் சித்ரா சுகுமார் நிறுவனத்திற்கு சீல் வைத்ததோடு, அதன் உரிமையாளர் செந்திலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.