காரைக்குடி: ரஸ்க் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல்

காரைக்குடியில் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த ரஸ்க் தயாரிப்பு நிறுவனம் மீது, அப்பகுதி மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வணிகப் பயன்பாட்டுக்காக குடியிருப்பு அனுமதி பெற்றிருந்த நிறுவனம் மீது, பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகரமைப்பு அலுவலர் தாமரைசெல்வன் தலைமையிலான குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி