சிவகங்கை: பள்ளி மாணவன் கடத்தல் – தங்க தாயம் பறிப்பு

சிங்கம்புணரி அருகே 2ஆம் வகுப்பு மாணவன் மதிய உணவு இடைவேளையில் கடத்தப்பட்டான். 'மாமா' என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மர்மநபர், மாணவனை திருச்சி மாவட்டம் கோசுகுறிச்சியில் இறக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க தாயத்தை பறித்து தப்பியதாக கூறப்படுகிறது. தனியாக நின்ற மாணவனை அப்பகுதியினர் மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்களுக்கு தெரியாமல் மாணவன் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததே காரணம் எனவும், சுற்றுச்சுவர் அமைக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி