துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

காரைக்குடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட சங்கராபுரம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள், தங்களுக்கு வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்ட சம்பளம் வழங்கப்படுவதாகவும், பணியாளர்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், PF பணத்தை முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி ஆணையர் சங்கரன், தமிழகத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளில் இந்த ஊதிய உயர்வு பிரச்சினை உள்ளதாகவும், இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அரசு உத்தரவிட்ட பின்பு அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி