சிவகங்கை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

சிவகங்கை அடுத்த வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் பெரிய கோட்டை பஞ்சாயத்து கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் தென்பாண்டி சிங்கம் மற்றும் அவரது நண்பர் ரியாஸ் இருவரும் இருசக்கர வாகனத்தில் சுந்தர நடப்பு அருகே வரும்போது சாலை அமைக்கும் பணி அப்பகுதியில் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அதில் உரிய எச்சரிக்கை பலகைகளின்றி சாலை ஓரம் ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது இருசக்கர வாகனம் சென்ற போது வழுக்கி கீழே தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து தனது சகோதரரை காப்பாற்ற எண்ணி அண்ணன் முனீஸ்வரனும் தனது இருசக்கர வாகனத்தில் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இவரும் அந்த ஜல்லிக் கற்கள் மீது வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் மீட்ட உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் முனீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு காரணமான முறையாக எச்சரிக்கை பதாகைகள் வைக்காத அந்த சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மற்றும் முனீஸ்வரனின் உறவினர்கள் தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி