சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துராமலிங்க தேவர் நகரில் நகராட்சி கண்ணதாசன் நகர் பூங்கா அங்குள்ள உள்ளது இந்த பூங்கா பராமரிப்பு இன்றி புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளது இங்கு அமைக்கப்பட்டுள்ள நீர் ஊற்று நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி பயன்படாமல் உள்ளது இந்த நீரூற்றில் மழை தண்ணீர் தேங்கி பாசம் பிடித்து உள்ளது இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகள் நடைபயிற்சிக்கு பெரியவர்கள் கொசு கடித்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது நகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்குள் வந்து சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் அவர்களை எச்சரிக்கை செய்து செல்லும் நிலையில் அதிக அளவில் அப்பகுதி மக்கள் பூங்காவிற்கு பொழுதுபோக்கிற்கு வரும் இடத்தில் மழை தண்ணீர் நீரூற்றில் தேங்கியுள்ளதை கண்டு கொள்ளவில்லை பூங்காவில் இருந்த அப்பகுதி 27 வது வார்டு அதிமுக நகர மன்ற உறுப்பினர் பிரகாஷ் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் ஆணையாளரிடம் புகார் கொடுக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவரே நீரற்றுக்குள் இறங்கி
வாளியில் மழை தண்ணீரை எடுத்து வெளியேற்றினர் புதர் போல் மண்டி இருந்த செடிகளையும் அப்புறப்படுத்தினார்.