சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக, கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலா முறை ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.