புகாரின் பேரில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமா, துணை முதல்வர் விசாலாட்சி உள்ளிட்டோர் முன்னிலையில் ராக்கிங் தடுப்பு கமிட்டி விசாரணை நடத்தியது. முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்களை தனித்தனியே அழைத்து விசாரணை நடத்தினார்கள். காவல்துறை பெண் அதிகாரிகள், வழக்கறிஞர் சமூக ஆர்வலர் உள்ளிட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவ மாணவியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணை நிறைவுற்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்த பின்பு ராக்கிங் செய்ததை தெரியவரும். மேலும் ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.