காரைக்குடி வைரவபுரம் ஐந்தாவது வீதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு பகலாக தூங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால்களை தூர்வாரி, மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.