சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் விளைபொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.