ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருந்துக்கடைகள் அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 950 மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டன. ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.