காரைக்குடி: கடித்து குதறிய வளர்ப்பு பூனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வருபவர் சுலோச்சனா (70). இவருக்கு முனீஸ்வரி பாண்டி செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூதாட்டி சுலோச்சனா தனியாக தனது பேரனுடன் வசித்து வந்தார். இவருக்கு திடீரென்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

நேற்று அவரது பேரன் லோகேஸ் மூதாட்டி சுலோச்சனாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து மூதாட்டி சுலோச்சனா வீட்டு முன்புறத்திலும் பேரன் லோகேஷ் வீட்டு உள்புறத்திலும் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் இரவு மூதாட்டி சுலோச்சனா இறந்து விட்டார். அவர்கள் வீட்டில் பூனை ஒன்றும் நாய் ஒன்றும் வளர்த்து வருகின்றனர். 

பூனை மூதாட்டி சுலோச்சனா வாயிலிருந்து வரும் அந்த வாசனையை வைத்து அவர் முகம் முழுவதும் கடித்து குதறியுள்ளது. இதை பார்த்த வளர்ப்பு நாய் பூனையுடன் போராட்டம் நடத்தி பூனையை கொன்று விட்டது. வளர்ப்பு நாய் மனிதர்களின் நன்றியுள்ள பிராணி நாய் என்பதை இந்த வளர்ப்பு நாய் நிரூபித்துள்ளது.

தொடர்புடைய செய்தி