தேவகோட்டையில் அமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திமுக முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத் தலைவர் ரூசோவின் 27ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ரூசோவின் நினைவிடத்திலும் வெண்கலச் சிலை முன்பும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மூ. தென்னவன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், ரூசோவின் மனைவி ஜோன்ஸ் ரூசோ மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி