தாயார் லேசான காயத்துடன் தப்பிஓடிய நிலையில் இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் மும்முடிச்சாத்தான்பட்டியை சேர்ந்த ராஜபிரபு(35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைசெய்யப்பட்ட வெங்கடேசன் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தை மகள் வைஷ்ணவி என்பவருடைய கணவர் செந்தில் என்பவரை வெட்டிகொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்பு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். தன்னை வெட்டியதால் ஆத்திரம் அடைந்த செந்தில் வெங்கடேசனை தன்னுடைய நண்பனான ராஜபிரபு மூலம் கூலிப்படையை ஏற்பாடு செய்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.