காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கார்த்திக் சிதம்பரம், தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியான குளறுபடிகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினார். இந்தத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மீண்டும் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.