சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், ஒருவர் போலி தங்க நகையை அடகு வைத்து ரூ.50,000 மோசடி செய்துள்ளார். பாரதி நகரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான அடகு கடைக்கு வந்த மணி என்ற நபர், 6 கிராம் தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். நகையில் 916 முத்திரை இருந்ததால், அதைச் சரிபார்க்காமல் சரவணன் பணம் கொடுத்துள்ளார். பின்னர், நகை போலியானது என்றும், அந்த நபரின் பெயரும் முகவரியும் பொய்யானது என்றும் தெரியவந்தது. தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.