காரைக்குடி: அம்மா உணவகம் புதுப்பிப்பு பணி - அமைச்சர் பிரபு

காரைக்குடி நீதிமன்றம் அருகே உள்ள அம்மா உணவகத்தை அமைச்சர் டி.கே. பிரபு பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையாளர் சங்கரனிடம், அம்மா உணவகத்தை உடனடியாக புதுப்பித்து, தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் சங்கரன், ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு அம்மா உணவகம் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சரிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி