காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், ஏழாவது வார்டு பாவேந்தர் சாலையில், மாநகராட்சி குடிநீர் நிதியின் கீழ், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் குடிநீர் விநியோகத்தை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக மாமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.