ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள காரைக்குடி பழைய அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் டாக்டர் டி. கே. பிரபு, காலை நேரங்களில் மட்டும் செயல்படும் அந்த மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சுமார் 5 கி.மீ. தொலைவில் இருப்பதால், பழைய மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றினால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என அமைச்சர் வலியுறுத்தினார்.