தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை இன்றையதினம் (9. 2. 2026) தொடங்கி வைத்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் திரு. சங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி