விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (43) தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக காரைக்குடி, குன்றக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு நேரங்களில் காரில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றுள்ளார், 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் பொன்ராஜை விருதுநகரில் வைத்து கைது செய்தனர்,
அவரிடமிருந்து இதுவரை 46 பவுன் தங்கம், வெள்ளி நகைகள், 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், திருடுவதற்குப் பயன்படுத்திய கடப்பாரை, உளி மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய பாலினோ கார் ஆகியவையும் திருடிய பணத்தில் வாங்கிய மேலும் இரண்டு கார்களும் மொத்தம் மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.