திருப்பத்தூரில் உள்ள அருள்மிகு பூமாயி அம்மன் திருக்கோயிலில், பூசாரி பூஜைக்காக கோயில் கதவைத் திறந்தபோது, காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அன்னதான உண்டியலையும் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செயல் அலுவலர் திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.