காரைக்குடியில், கைப்பேசியை அடிக்கடி பயன்படுத்தி அதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஜெதாஷினி (13) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தந்தை ராஜஸ்தானில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.