காளையார்கோவில் பகுதியை சேர்ந்த மலைராஜன் இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை தனியார் ஆம்புலண்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் அவ்வழியாக பால் ஏற்றி கொண்டு வந்த குளிரூட்டி வேனும் ஆம்புலன்ஸ் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் நோயாளி மலைராஜனுக்கு மீண்டும் தலையில் காயம் ஏற்பட்டு சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.