சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.