சிவகங்கை: முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை உன்னிப்பாக கவனித்து அதை ஃபார்வேர்டு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்றவற்றை பரப்ப கூடாது என்றும், ஏனெனில் இது தேசிய பாதுகாப்பிற்கு எதிரானதாக இருக்கும் என்றும், எனவே அதுபோன்ற விஷயங்களை நாம் ஃபார்வேர்டு செய்யாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த போர் சம்பந்தமாக எப்படி நம்மளை தற்காத்துக் கொள்வது என்பது இந்திய ராணுவம் மற்றும் அரசு தெரிவிக்கும் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி