தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம்

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் பிரகதீஸ்ராம், கோயம்புத்தூரில் நடைபெற்ற 11 வயதிற்குட்பட்டோருக்கான நார்த் ஜோன் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் 300 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் தொடர்ச்சியாக, ஹரியானா - குருகிராமில் நடைபெற்ற CBSE தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். SGFI தேசிய போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ள பிரகதீஸ்ராமுக்கு பள்ளி சேர்மன் குமரேசன் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி