இவ்வளாகத்திற்குள் இருந்த மரங்கள் சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட நிலையில், சில மரத்துண்டுகள், காய்ந்த சருகுகள் அப்புறப்படுத்த படாமல் வளாகத்திற்குள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது. இன்று (செப்.20) காய்ந்த இலை சருகுகளில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
தீ மள, மளவென பரவி வருவதை கண்ட பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
தீ பற்றிய வளாகத்தை சுற்றி மர ஆலைகள், வணிக நிறுவனங்கள், மின்மாற்றிகள் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில், தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், பெரும் உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் தவிர்க்கப்பட்டது.