இதன் விளைவாக, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது கண்மாயின் கரையை உடைத்து தும்புகள் பதித்தும் மோட்டார் மூலமாகவும் தண்ணீர் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மழை பெய்யும் நீரை சேமித்து வைக்க இயலவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மழைக்காலம் நெருங்கி வருவதால், கண்மாயை விரைந்து சீரமைத்து, விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஜித்திடம் மனு அளித்துள்ளனர்.
Motivational Quotes Tamil