சிவகங்கை: டிப்பர் லாரி மோதி முதியவர் பலி - உறவினர்கள் சாலை மறியல்

காரைக்குடி அருகே அமராவதி புதூர் பகுதியைச் சேர்ந்த 65 வயது பூசாரி பாண்டி, சங்கரபதி முனீஸ்வர் கோவிலுக்கு நடந்து சென்றபோது டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். விபத்து திட்டமிட்ட சதி என உறவினர்கள், கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காரைக்குடி-தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோமநாதபுரம் காவல்துறையினர் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி