சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலத்தில், 2020 முதல் 2023 வரை படைப்பு வீடு ஒன்றில் பணியாற்றிய தம்பதியினரின் 6ம் வகுப்பு படிக்கும் மகளிடம், அங்கு கணக்குப்பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (62) என்பவர் செல்போன், சமூக வலைதளம், திண்பண்டங்கள் என ஆசை காட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர்.