சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கந்திடல் பகுதியில் உள்ள பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில், பூா்ணகலை, புஷ்ப கலை தேவியருடன் அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இரவில் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும், காரைக்குடி செக்காலை சிவன் கோயில், நகர சிவன் கோயில், மாத்தூா் ஐந்நூஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.