காரைக்குடியில், மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அப்பாஸ் (70) என்பவர் தனது ஆசனவாய் வழியாக மதுபாட்டிலை உள்ளே செலுத்தியதால் கடும் வலியால் துடித்தார். உறவினர்களால் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாட்டிலை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். பாட்டில் உடையாமல் இருந்ததால் உயிர் பிழைத்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.