சிவகங்கை: வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தற்போது ரூ. 77. 11 கோடியில் நடைபெற்று வரும் 12 வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2022-2023, 2023-2024, 2024-2025-ஆம் நிதியாண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24-இன் கீழ் ரூ. 6. 19 கோடியில் தினசரி சந்தையின் கட்டுமானப் பணிகள், ரூ. 3. 95 கோடியில் பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், ரூ. 6 கோடியில் குழாய் பதிக்கும் பணிகள், அம்ருத் 2. 0 திட்டத்தின் கீழ் ரூ. 23. 31 கோடியில் தினசரி குடிநீா் விநியோகத்துக்கான பணி, ரூ. 33. 71 கோடியில் புதைகுழி கழிவுநீா் திட்டப்பணி உள்ளிட்ட 12 வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 77. 11 கோடியில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று ஆட்சியா் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி