வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த முதியவருக்கு வெட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மருதவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). இவர், நேற்று (செப்.17) காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அரிவாளால் வெட்டினார். அக்கம் பக்கத்தினர் விரட்டியதும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். காயமடைந்தவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி