சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி NAKSHA முன்னோடி திட்டத்தின் கீழ் நகர நில அளவை பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நில அளவை மற்றும் எல்லைகள் குறித்த சட்டத்தின்படி, 17 வார்டுகளின் 237 பிளாக்குகளில் உள்ள 29,291 நகர புல எண்களில் நில உரிமையாளர்களின் விபரங்கள், அலைபேசி எண், ஆதார் எண், சொத்துவரி விதிப்பு எண், முகவரி, கட்டிட அனுமதி விபரங்கள், வீட்டின் புகைப்படம் போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும். இத்திட்டத்தின் முடிவில் நில உரிமைதாரர்களுக்கு சொத்து விபர அட்டை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.