இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு, கடன் மற்றும் வட்டி விகிதங்களில் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறமாயின் ரூ. 3,00,000/-க்கு மிகாமலும், திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகர்ப்புறமாயின் ரூ. 8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்). மேலும், திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30,00,000/- கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.