காரைக்குடியில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் மனைவி

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து காரைக்குடியில் தங்கினார். இன்று காலை காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயிலில் உறவினர்களுடன் தரிசனம் செய்தபின், குன்றக்குடி கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு பொன்னம்பல அடிகளார் வரவேற்பளித்தார். குன்றக்குடி அடிகளாரின் அருளாலயத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி, நினைவு மண்டபத்தில் அரிய புகைப்படங்களை பார்வையிட்டார். பள்ளி மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாடினார்.

தொடர்புடைய செய்தி