சிவகங்கை: வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (43) இவரிடம் காரைக்குடியைச் சேர்ந்த ரவி அவரது மனைவி சாந்தி மகன் பிரசன்னா ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்கள். இதை நம்பி சாகுல் ஹமீது உள்பட 51 பேர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.67 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுத்துள்ளார்கள். 

பணத்தைப் பெற்றுக் கொண்ட மூன்று பேரும் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை கேட்டவர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளார்கள். இது குறித்து சாகுல் ஹமீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ்ராவத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி கணவன் மனைவி உள்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி