விழா சிறப்பாக அமைய, நேற்று (11.06.2025) பகல் 12 மணி முதல் 2 மணி வரை ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் பத்து ரூபாய் மட்டும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிகாலை முதல் பொதுமக்கள் - ஆண்கள், பெண்கள் என தனித்தனி வரிசையில் - பெருங்கூட்டமாக காத்திருந்து வந்தனர். சரியாக 12 மணிக்கு சிக்கன் பிரியாணி பொட்டலங்கள் விநியோகிக்கத் தொடங்கப்பட்டன.
வரிசையில் காத்திருந்த மக்கள், முட்டையுடன் சிக்கன் பிரியாணியை பத்து ரூபாய்க்கு வாங்கி மகிழ்ச்சியடைந்தனர். பெருகிய கூட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர்.