காரைக்குடி: பிரேக் பிடிக்காததால் பேரிக்காடில் மோதிய பேருந்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்து வந்துள்ளது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும் போது இந்த அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், பேருந்து நிற்காத காரணத்தினால் அங்கிருந்த பேரிக்காடு மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும், பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி