சிவகங்கை: மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை வெட்டிக்குளம் கிராமத்தில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, புதுக்கோட்டை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மையில், சிறிய மாட்டுக்கு 6 மையில் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் சாரதிக்கும் ரொக்க பரிசும் நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி