காரைக்குடி: திமுக பிரமுகரின் தகாத உறவுகள்... அதிர்ச்சித் தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் நான்காவது வீதியில் வசித்து வருபவர் சாமி ஐயா. இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து காரைக்குடிக்கு வந்து சொந்த ஊரான ஆவுடையார்கோவில் சென்று திரும்பியபோது தென்கரை அருகே வரும்போது இவரது காரை வழிமறித்து சிலர் தாக்கியுள்ளனர். 

இதில் காயமடைந்த அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பூர்ணிமா இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த சதீஷ் என்ற திமுக பிரமுகருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். 

இது சாமி ஐயாவுக்குத் தெரியவர அவர் அதைத் தட்டிக்கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர்கள் சதீஷ் அடியாட்களை வைத்து அவரை கொலை முயற்சி செய்ததாக சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திமுக பிரமுகர் இவரது மனைவியை மட்டுமின்றி அந்தப் பகுதியில் இதுபோன்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் பல பெண்களை குறிவைத்து ஏமாற்றி அவர்களுடன் தகாத உறவில் இருப்பதுடன் அவர்களுடைய சொத்தை அபகரிப்பதே இவருடைய வேலையாக இருப்பதாக சாமி ஐயா தெரிவித்துள்ளார். 

தற்போது திமுக பிரமுகர் சதீஷை மட்டும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகாத உறவால் கணவன் தாக்கப்பட்ட சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி